இவர் தான் என் கணவர்! இவர்கள் தான் என் இரண்டு குழந்தைகள்.. நடிகை நிவேதா தாமஸ் செய்த விஷயம்

Nivetha Thomas
By Kathick Jul 04, 2024 01:30 PM GMT
Kathick

Kathick

Report

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகை நிவேதா தாமஸ் சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், நிவேதாவிற்கு திருமணம் ஆகப்போகிறது என கூறி வந்தனர்.

ஆனால், திருமணம் இல்லை அது தான் நடிக்கும் திரைப்படத்தை பற்றிய பதிவு என நிவேதா கூறி திருமணம் குறித்து பரவிய வந்தந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த நிலையில், சமீபத்தில் தனது திருமணம் குறித்து எழுந்த வதந்தி குறித்து பேசினார் நடிகை நிவேதா தாமஸ்.

இதில் நடிகை நிவேதா தாமஸ் திருமணம் செய்துகொள்ள போவதாக உலா வந்த செய்திகளை பார்த்துவிட்டு, அவரது தாய் நிவேதா தாமஸ் இடம் இதைப்பற்றி கேட்டாராம். மேலும் குழந்தைகள் ஏதும் இருக்கிறார்களா என நக்கலாக தனது மகளை கிண்டலும் செய்தாராம்.

அதற்கு மேடையில் பதிலளித்த நிவேதா தாமஸ், இதுதான் என் கணவர், இவர்கள் தான் என்னுடைய இரண்டு மகன்கள் மூத்தவர் பெயர் அருண், இளையவன் பெயர் வருண் என படத்தில் தனக்கு கணவராக நடித்த நடிகரையும், மகன்களாக நடித்தவர்களையும் அறிமுகப்படுத்தி அரங்கத்தில் இருந்தவர்களை சிரிக்கவைத்தாராம்.