விரைவில் திருமணம் செய்கிறாரா நிவேதா தாமஸ்!! யார் மாப்பிள்ளை தெரியுமா?

Nivetha Thomas Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 25, 2024 08:00 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த நிவேதா தாமஸ், குருவி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

அதன் பின் ஜெய் நடிப்பில் வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார்.

நிவேதா நானியுடன் இணைந்து நடித்த படங்கள் அங்கு நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக நிவேதா தமிழில் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நிவேதா தாமஸ், "It's been a while..... but. Finally! என்று எக்ஸ் தலத்தில் குறிப்பிட்டு ஹார்ட் சிம்பிள் உடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள், நிவேதா தாமஸ் காதலில் விழுந்துவிட்டாரா? யார் மாப்பிள்ளை, எப்போது திருமணம்? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.   

விரைவில் திருமணம் செய்கிறாரா நிவேதா தாமஸ்!! யார் மாப்பிள்ளை தெரியுமா? | Nivetha Thomas Getting Married