சாப்பாட்டில் கரப்பான் பூச்சி! ஓட்டலையே மூட வைத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக திகழ்ந்து பிரபலமானவர் நடிகை நிவாதா பெத்துராஜ். லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே இருக்கும் நிவேதா சில தினங்களுக்கு முன் சென்னை ஓஎம் ஆர் சாலையில் இருக்கும் மூன்லைட் ஓட்டலில் ஸ்விக்கி செயலியை கொண்டு பிரைட் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார்.
பிரைட் ரைஸை சாப்பிட திறந்த போது கரப்பான் பூச்சி அதில் இருப்பதை அறிந்துள்ளார். உடனே அதை கரப்பான் பூச்சி இருக்கும் போட்டோவையும் அதோடு இப்படி கரப்பான் பூச்சி கிடப்பது புதிதல்ல என்று கூறி இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.
புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, மூன் லைட் ஓட்டலை தற்காலிகமாக செயல்படுவதற்கு தடை விதித்துள்ளது உணவு பாதுகாப்புத்துறை அதிகார்கள். இந்த நடவடிக்கையால் 3 நாட்களில் ஓட்டலின் குறைகளை நிவர்த்தி செய்யவும் புகைப்படத்தோடு ஆதரங்களை சமர்பிக்கவும் கூறியுள்ளனர்.
மேலும் ஓட்டலில் 10 கிலோ பழைய இறைச்சியை பறிமுதல் செய்தும் சென்றுள்ளனர்.
