நோ செல்போன்ஸ்..நோ பிரபலங்கள்!! விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா போட்ட கண்டீசன்கள்..
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா
நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டவை காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் பிப்ரவரி 26ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.

உதய்பூரில் உள்ள அரண்மனையில் இவர்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில், முன்னணி பாலிவுட் ஹீரோ படத்திலிருந்து நடிகை ராஷ்மிகா மந்தனா விலகியுள்ளார்.
பதாய் ஹோ பட இயக்குனர் அமித் ஷர்மா அடுத்து ஷாஹித் கபூர் மற்றும் ராஷ்மிகா ஜோடியாக நடிக்கும் romcom படத்தை இயக்குவதாக இருந்தார்.
ஆனால், தற்போது அந்த படத்தில் இருந்து தான் நடிகை ராஷ்மிகா வெளியேறி இருக்கிறார். திருமணம் நடப்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

கண்டீசன்கள்
அதேபோல் ராஷ்மிகா - விஜய் திருமணத்திற்கு பிரபலங்கள் மற்றும் மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லாமல் எளிமையான முறையில் நடக்கவுள்ளதாம்.
பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே திட்டமிட்டுள்ள இந்த ஜோடி திருமணத்திற்கு பின் 2 மாதங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கவும் முடிவெடுத்துள்ளார்களாம்.