பப்ளிசிட்டி இல்லாமல் எப்படி! பீஸ்ட்-ஆல் பிளாப்பாகுமா அஜித்தின் வலிமை..

ajith vijay valimai nelson hvinoth boneykapoor beast
By Edward Feb 18, 2022 03:30 AM GMT
Report

முன்னணி நடிகராக திகழ்ந்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். 3 வருடங்களாக அவர் நடித்த வலிமை படத்திற்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதற்கு டிரீட்டாக வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

ரிலீஸாக இன்னும் ஒருவாரம் இருக்கையில் அதுபற்றி எந்த பிரமோஷனும் இன்னும் எங்கும் செயல்படுத்தாமல் இருப்பதே மக்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது.

இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் மிஸ்மி பேட்டியொன்றில், ப்ரோமோஷன் வேளையில் பெரிதளவில் இல்லை என்றும், வலிமை படத்தின் வியாபாரம் தயாரிப்பாளருக்கு திருப்த்தி தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், விஜய்யின் அரபிக் குத்து பாடல் ரீச் ஆன அளவிற்கு கூட, அஜித்தின் படங்களுக்கு ரீச் இல்லை என்றும், விஜய்யுடைய படங்களுக்கு இருக்கும் வியாபாரம், அஜித்தின் படங்களுக்கு இல்லை என்றும் பிஸ்மி கூறியுள்ளார்.

மேலும், ஆரம்பகால கட்டத்தில் நண்பர்களாக இருந்த அஜித், விஜய் இருவரும், ஒரு கட்டத்திற்கு மேல் விரோதிகளாக மாறினார்கள். பத்திரிகையாளர்களிடம் கூட, விஜய்யை பற்றி அஜித் வருத்தப்பட்டு பேசியுள்ளார் என்றும் பேசியுள்ளார்.