காட்டுக்குள் வைத்து பாகுபலி நடிகையிடம் அத்து மீறிய நடிகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்
பாலிவுட் சினிமாவின் பிரபல கவர்ச்சி நடிகையாக திகழ்பவர் நோரா ஃபதேஹி. இவர் 2014 -ம் ஆண்டு வெளியான ரோர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் மனோகரி பாடலில் கவர்ச்சியாக நடனமாடியிருப்பார்.
சமூக வலைத்தளங்களில் நோரா ஃபதேஹி பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
அத்து மீறிய நடிகர்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நோரா ஃபதேஹி, " என்னுடைய முதல் படம் காட்டுக்குள் வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது என்னுடன் நடித்து வந்த சக நடிகர் என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார். அப்போது நான் அவரின் கன்னத்தில் ஓங்கி அறை விட்டேன்.
அந்த நடிகரும் பதிலுக்கு என்னை அறைந்தார். அதன் பின்னர் இருவரும் மோசமாக சண்டை போட்டுக் கொண்டோம்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.