இந்திய கிரிக்கெட் வீரருடன் நடிகை ஸ்ரீலீலா காதலா? வெளியான அறிக்கை..
தென்னிந்திய சினிமாவில் இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீலீலா. இவர் நடிப்பை தாண்டி நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீலீலா பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை காதலித்து வருவதாக தகவல் ஒன்று இணையத்தில் கடந்த சில நாட்களாக உலா வந்தது.

ஸ்ரீலீலா காதலா?
இதற்கு ஸ்ரீலீலாவின் தாயாரா, இந்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை, உண்மை இல்லை. இப்படிப்பட்ட கதைகள் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. இது முற்றிலும் கற்பனையான தகவல் தான்.
ஒரே நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் வந்ததாக சொல்லப்படுவது எதேச்சையாக நடந்தது. வேறு எதுவம் இல்லை. சம்மந்தமே இல்லாத விஷயத்தை வைத்து தேவையில்லாத கதைகளை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள் என்று கூறியிருந்தார்.

மேலும் தற்போது ஸ்ரீலீலா தரப்பில் முழு விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதில், நடிகை ஸ்ரீலீலா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா என இருவருக்கும் எந்த தொடர்பும் இலை. இதுவரை அவர்கள் சந்தித்தது கூட இல்லை. பரவி வரும் தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யானவை, ஆதாரமற்றவை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.