12 கிலோ குறைத்த ரோஹித் சர்மாவின் நியூ லுக்!! கைக்கடிகாரம் இத்தனை லட்சமா..
ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஓடிஐ தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். வரும் ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெற்றுள்ள ரோஹித் சர்மா உடல் பருமனை வைத்து பலரும் ட்ரோல் செய்து வந்தனர்.
ஃபிட்னஸ் இல்லாதவர் என்ற தன் மீது வரும் ட்ரோல்களுக்கு எல்லாம் தக்க பதிலடி கொடுக்கும் வண்ணம் சுமார் 12 கிலோ எடையை தீவிர உடற்பயிற்சி மூலம் குறைத்துள்ளார்.
சமீபத்தில் CEATCricketAwards2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஹித் சர்மாவின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது.
கைக்கடிகாரம்
ரோஹித் சர்மாவின் நியூ லுக்கை பார்த்து ரசிகர்கள் வியந்து பார்த்த நிலையில், அவர் அணிந்த வாட்ச் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது. Patek Philippe Aquanaut 5167A என்ற பிராண்ட் வாட்ச் அணிந்து வந்துள்ளார் ரோஹித்.
அதன் விலை ரூ. 63 லட்சம் என்று கூறப்படுகிறது. ஸ்டைன்லஸ் ஸ்டீலால் ஆன, கருப்பு நிற எம்பேஸ் டையலுடன் கூடிய இந்த வாட்ச் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
