குழந்தை பெத்துக்க கூடாதுனு முடிவெடுத்தேன்..காரணம் இதுதான்!! நடிகை விஜயசாந்தி ஓபன்

Tamil Cinema Tamil Actress Kids
By Bhavya Dec 18, 2024 05:15 PM GMT
Report

விஜயசாந்தி

பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்' படத்தின் மூலமாக சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் விஜயசாந்தி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

குழந்தை பெத்துக்க கூடாதுனு முடிவெடுத்தேன்..காரணம் இதுதான்!! நடிகை விஜயசாந்தி ஓபன் | Old Actress Talk About Not Having Kids

வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் மாஸான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் தொடர்ந்து பல படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிஸியான நாயகியாக வலம் வந்த போதே அரசியலில் களமிறங்கியிருந்தார்.

காரணம் இதுதான்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய விஜயசாந்தி குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஏன் என்பதை குறித்து பேசியுள்ளார். அதில், " குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காது, பெண்களுக்கு இதுதான் முக்கியமான விஷயம்.

குழந்தை பெத்துக்க கூடாதுனு முடிவெடுத்தேன்..காரணம் இதுதான்!! நடிகை விஜயசாந்தி ஓபன் | Old Actress Talk About Not Having Kids

இதுபற்றி நிறைய யோசித்திருக்கிறேன், ஆனால் எங்கேயோ ஓரு இடத்தில் எனக்கு குழந்தைகள் இருந்தா தெலுங்கானாவில் அதை வைத்து என்னை பிளாக்மெயில் செய்ய வாய்ப்புள்ளது என்ற சந்தேகம் வந்தது.

அதன் காரணமாக குழந்தை வேண்டாம் என்று தோன்றியது. இது குறித்து என் கணவரிடம் கூறினேன் அவரும் எனது முடிவை ஏற்றுக்கொண்டார்" என்று தெரிவித்துள்ளார்.