நிஜப்போரில் ராணுவ வீரனாக சண்டையிட்ட ஹீரோ..ஷூட்டிங்கில் நடந்த துயரம்!! யார் அந்த நடிகர்..
நடிகர் சத்யன்
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் எப்படி சிவாஜி கணசனை சொல்வார்களோ அதேபோல் மலையாள சினிமாவில் நடிப்பு என்றால் அது நடிகர் சத்யன் தான். மலையாள சினிமாத்துறையில் கொண்டாடப்பட்டு வரும் சத்யன், 20 ஆண்டுகள் சினிமாவில் கொடிக்கட்டிப்பறந்தார். அவரை நினைவுப்படுத்திக்கொள்ள செம்மீன் என்ற படம் ஒரு உதாரணமாக இருக்கும். அப்படத்தில் பழனி என்ற ரோலில் நடித்து மலையாள சினிமாவில் ஆல் டைம் ஃபேவரைட்டாக திகழ்ந்தார்.

1952ல் இருந்து 1971 வரை மலையாள சினிமாத்துறையில் முன்னணி நடிகராக இருந்தார். அவர் மலையாளத்தில் அறிமுகமான ஆத்மசகி படம் ஒருசில காரணங்களால் படவெளியீடு தள்ளிப்போக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரியசகி என்ற பெயரில் வெளியானது. ஒரு மாதம் கழித்து தான் ஆத்மசகி படம் வெளியானது.
அப்படம் மலையாளிகளை திரும்பிப்பார்க்க வைத்ததோடு, சத்யனின் யதார்த்தமான நடிப்பு பலரை கவர்ந்து 20 ஆண்டுகள் வரை நீட்டிக்க வைத்தது. அப்போது அவருக்கு வயது 39 வயதாகியிருந்துள்ளது. சத்யன் பற்றி தெரியாத அவரின் நிஜ வாழ்க்கை இருக்கிறது. ஆசிரியர், ராணுவ வீரர், இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஒரே நடிகராக திகழ்ந்துள்ளார் சத்யன். 3 வேலைகளை பார்த்த இந்திய நடிகர் இவர் மட்டும் தான்.

போரில் ராணுவ வீரனாக
மேலும் பிரிட்டீஷ் இந்தியன் ஆர்மியில் சேர்ந்து போரில் பங்கேற்று பர்மா, மலேசிய நாடுகளில் நடந்த போர்களில் போர் வீரனாக பணியாற்றியிருக்கிறார் சத்யன். இந்திய வைஸ்ராயின் கமிஷனர் ஆஃபிசராக அணியாற்றியும் உலகப்போருக்கு பின் சொந்த ஊருக்கு திரும்பி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் போலிஸ் இன்ஸ்பெக்ரானார்.
ஆலப்புழாவில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது நடிப்பின்மீது ஆர்வம் ஏற்பட்டு அமெச்சூர் நாடகங்களில் நடித்தார். நடிப்பில் சமஸ்தானம் எதிர்க்க, அதை உதறிவிட்டு தியாகசீமா என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஆத்மசகி படத்தில் எண்ட்ரியாகி டாப் நடிகராக மாறினார் சத்யன்.

ஷூட்டிங்கில் நடந்த துயரம்
1971ல் அனுபவங்கள் பாலிச்சாக்கள் என்ற படத்தில் நடிப்பதற்கு ஒராண்டுக்கு முன் ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். நோய் பற்றி யாரிடமும் பகிராமல் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் அதே மிடுக்குடன் தனியாக காரை ஓட்டிக்கொண்டு ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார். ஒருநாள் படத்தின் ஷூட்டிங்கின்போது மரத்தடியில் கதாநாயகி ஷீலா மடியில் படுத்தபடி எடுத்த காட்சியில் நடித்தார்.
அக்காட்சி முடிந்தபோது ஷீலாவின் உடையில் ரத்தக்கறை. அது சத்யன் மூக்கிலிருந்து வழிந்த ரத்தம் தான். சற்றும் பதறாத சத்யன், ஒரு துணியை எடுத்து மூக்கினை துடைத்து, உர்டையில் ரத்தக்கறை படிந்ததற்காக ஷீலாவிடம் மன்னிப்பு கேட்டு புறப்பட்டுள்ளார். தானே காரை ஓட்டிச்சென்று மருத்துவமனைக்கு செல்ல டாக்டர் பார்த்து பேசிக்கொண்டிருந்தவருக்கு பேசும்போதே நினைவு தவறியிருக்கிறது. அப்போது தான் சத்யன் மாஸ்டர் என்ற மகாநடிகரின் உயிர் பிரிந்தது.