நீங்க என்ன வேணா பேசுங்க..ஆண்கள் தான் பாவம்!! நடிகர் ரவி மோகன் பதிலடி..

Gossip Today Aarti Ravi Ravi Mohan
By Edward Mar 11, 2026 08:30 AM GMT
Report

ரவி மோகன்

நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் கடந்த 2009ல் திருமணம் செய்து இரு ஆண் மகன்களை பெற்று வளர்த்து வந்தனர். சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்த இருவரும் கடந்த 2024ல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார்கள்.

15 ஆண்டுகள் ஒன்றாக இருந்தப்பின் விவாகரத்து பெற்று பிரிந்த ரவி மோகன், தன்னுடைய தோழி கெனிஷாவுடன் பல இடங்களுக்கு இணைந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

நீங்க என்ன வேணா பேசுங்க..ஆண்கள் தான் பாவம்!! நடிகர் ரவி மோகன் பதிலடி.. | Only Women Right Men Are The Culprit Ravi Mohan

இதுகுறித்து ரவி மோகனும் ஆர்த்தியும் மாறி மாறி தங்களின் கருத்துக்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் ரவி மோகன் தற்போது ஒரு பதிவு ஒன்றினை பகிர்ந்து, தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நீங்க என்ன வேணா பேசுங்க

அதில், நான் என்னுடைய வாழ்க்கையை அமைதியான முறையில் கட்டமைத்து வருகிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள். பெண்கள் செய்வது சரி என்று நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் ஆண்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள், நமது நீதித்துறைக்கூட அதை ஏற்றுக்கொள்கிறது. என்னுடைய மனதையும் என் நேசத்திற்குரியவர்களுக்கு நான் செய்தவற்றையும் ஒருநாள் நீங்கள் அறிவீர்கள்.

ஒரு மனிதனை அமைதியுடன் வாழவிடுங்கள். உங்கள் கேவலமான எண்ணங்களை நீங்கள் உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். நான் என் வழியில் செல்கிறேன் என்று அந்த பதிவில் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.