என்னய்யா பண்ணி வச்சிருக்கிற? மகளிர் தினத்தில் கேக் வெட்டி ஊட்டி விட்ட ஓபிஎஸ் ஈபிஎஸ்!
admk
ops
eps
womensday
By Edward
உலகம் முழுவதும் இன்று பெண்களை போற்றும் தினமான மகளிர் தினத்தை கொண்டாடி பெண்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இணையத்தில் இன்று மகளிர் தின வாழ்த்துக்களின் செய்திகளை பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படி அதிமுக-வை சேர்ந்த கழக ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இருவரும் இணைந்து மகளிர் தினத்தை தங்களின் கட்சியினருடன் கொண்டாடியுள்ளனர்.
அதற்காக அவர்களின் அலுவலகத்திற்கு தொண்டர்கள், கட்சி முக்கிய உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.கேக் வெட்டி சக மகளிர் உறுப்பினருக்கு இருவரும் மாறி மாறி ஊட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக மகளிர் தினம் - அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். pic.twitter.com/nZKxVWgE2G
— DON Updates (@DonUpdates_in) March 8, 2022