இந்த விசயத்தில் ரஜினியை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்.. ஜெயிலர்-ஆல் ஒரு பிரயோஜனமும் இல்லையே..

Ajith Kumar Rajinikanth Sivakarthikeyan Vijay
By Edward Oct 12, 2022 08:24 AM GMT
Report

உலகளவில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய ஸ்டைல், நடக்கும் விதம் உள்ளிட்ட பல குணங்களை வைத்து கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வரும் ரஜினிகாந்த அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு டாப் இடத்தில் இருந்து சரிய ஆரம்பித்துவிட்டார்.

1 இடத்தில் விஜய்

அதிகமாக பேசப்படும் நடிகர்கள் வரிசையில் சூப்பர் ஸ்டார் இடம் கொஞ்சம் கொஞ்சமாக முதல் இடத்தில் இருந்து 10 இடத்திற்குள் சென்றுள்ளது. அப்படி இந்தியளவில் அதிகமாக பாப்புலராகி வரும் நடிகர்கள் நடிகைகள், படங்கள் என்ற கருத்துக்கணிப்பை ஆர்மேக்ஸ் என்ற ஊடகம் மாதம் மாதம் வெளியிட்ட் வருகிறது. அந்தவகையில் சமீபகாலமாக முதல் இடத்தினை நடிகர் விஜய் மற்றும் அஜித் இடம்பிடித்து வருகிறார்கள். அப்படி செப்டம்பர் மாதம் வரை தமிழ் நடிகர்களின் வரிசையை வெளியிட்டுள்ளது ஆர்மேக்ஸ் ஊடகம். முதல் இடத்தினை எப்போதும் போல விஜய்யும், 2வது இடம் அஜித், 3 வது இடம் சூர்யா என்று இருக்கிறார்கள்.

ரஜினியை ஓரங்கட்டியது

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அப்படி தூக்கி இறக்கி இருக்கிறார்கள் முன்னணி நடிகர்கள். ரஜினிகாந்த் அந்த வரிசையில் 9வது இடத்தினை பிடித்திருக்கிறது தான் அதிர்ச்சியான தகவல். மேலும் இந்த வரிசையில், சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன் 4 வது இடத்தினை பிடித்துள்ளதும் ரஜினியை ஓரங்கட்டியது ஷாக்கை கொடுத்துள்ளது. 5வது இடம் தனுஷும், 5வது இடம் கமல் ஹாசனும், 7 விஜய் சேதுபதி, 8 விக்ரமும் பிடித்துள்ளனர். அப்படி ஜெயிலர் படத்தின் அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பது தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த சரிவிற்கு காரணம் என்று கூறி வருகிறார்கள்.

Gallery