திருமணத்திற்கு பின் அதிகரிக்கும் போட்டோஷூட்!! நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் படம் ரிலீஸுக்கு முன் தன்னுடைய 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் பேபி ஜான் படத்தின் பிரமோஷனில் பிஸியாக இருந்த கீர்த்தி சுரேஷிற்கு அப்படம் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்தது. படுமோசமான வரவேற்பை பெற்றதை வைத்து கீர்த்தி சுரேஷை விமர்சித்தும் இருந்தனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் கீர்த்தி சுரேஷியும் அவரது கணவரும், தல பொங்கல்-ஐ விஜய் நிறுவனத்துடன் கொண்டாடினார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு பின் கிளாமர் லுக்கில் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது அட்டை விளம்பரத்திற்கு எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.