எல்லைமீறிய லாஜிக் மீறல்கள்! கேஜிஎஃப் 2வுக்கு இந்த விஷயத்தில் பீஸ்ட்டே பரவால..
உலகளவில் மிகப்பெரிய வரவேற்புடன் தியேட்டர்களில் வெளியாகிய படம் கேஜிஎஃப் 2. நேற்று இப்படம் இந்தியா மற்றும் உலகளவில் ரிலீசாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. இப்படத்தின் விமர்சனத்தால் பீஸ்ட் படத்தில் தியேட்டர்கள் பரிபோகியுள்ளது தமிழகத்தில்.
அப்படி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரியளவில் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. அத்துனை விஷயங்கள் நிறையாக அமைந்து ஈர்த்தாலும் சிலவற்றை படக்குழு மிஸ் செய்துள்ளது.
அதில் முக்கியமாக இருப்பது லாஜிக் மீறல்கள் தான். என்ன தான் பிரம்மாண்ட படமென்றாலும் இப்படி லாஜிக் மீறல்கள் இருந்தால் சலிப்பைத்தான் உருவாக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அப்படி ஒரு காட்சியில் ஹீரோயின் கரண்ட் இல்லை என்று சொல்வாராம்.
அதற்கு ஹீரோ ஒரு ஹெலிகாப்டரயே கொண்டு வந்து மாடியில் நிறுத்தி விடுவாராம். இதில் கொஞ்சம் வாய்ப்பிளக்க வைத்தது என்றுதான் கூற வேண்டும். மேலும், ஹீரோ பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அவரையே அடிக்க செல்வாராம்.
அதுமட்டுமல்லாமல் பார்லிமென்ட்டில் புகுந்து அனைவரையும் சுட்டு விடுவாராம். அதில் ஒரு மந்திரி கூட இல்லாமல் அனைவரும் இறந்து விடுவார்களாம். சண்டை காட்சிகள் மிகப்பெரியளவில் இருக்கும் நிலையில் ஹீரோ கூலிங்கிளாஸ் மாட்டிக்கொண்டு தான் சண்டை போடுவார்.
இது முழுக்க பில்டப்பும் பிரம்மாண்டமும் தான் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இப்படி சிறிய விசயங்களில் படக்குழு கவனித்திருக்கலாம். ஆனால் மக்கள் இதை கண்டுகொள்ளாமல் படத்தின் பிரம்மாண்டத்தை ரசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.