கடன் தொல்லை! தமிழை விட்டு அக்கடதேசம் ஓடும் நடிகர்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அந்த நடிகர். சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகர் என்ற பெயரை எடுத்து வளர்ச்சி பெற்றுள்ளார். ஆரம்பத்தில் மக்களை கவர்ந்து படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
பின் அடுத்தடுத்த படங்களால் சம்பளமும் உயர்ந்தது மார்க்கெட்டும் உயர்ந்தது. இதன் மூலம் தானே தயாரிப்பில் இறங்கு சில படங்களை தயாரித்தும் வந்தார். அதேபோல் தன் இரு படங்களின் தோல்வியால் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கடன் தொல்லையில் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
அதை போக்க உதவியது சமீபத்திய 100 கோடி வசூல் அடித்த படம். அதன் மூலம் மார்க்கெட்டை உயர்த்தி 35 கோடி சம்பளத்திற்கு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். கடன் தொல்லையை போக்க வேறு வழியில்லாமல் அக்கடதேசத்திலும் தம் மார்க்கெட்டை உயர்த்த திட்டமிட்டு வருகிறார். அதற்காக ஹைதராபாத், லண்டன் வரை செல்லவுள்ளாராம்.