ஓவியாவிற்கு திருமணமா? ரசிகரால் கடுப்பான நடிகை

Oviya Marriage
By Kathick Feb 28, 2023 04:36 AM GMT
Report

ஓவியாவிற்கு திருமணமா? ரசிகரால் கடுப்பான நடிகை களவாணி படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஓவியா. இப்படத்தின் வெற்றிக்கு பின் இவர் படங்கள் நடித்து வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் மீண்டும் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

இதன்பின் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தேடி தரவில்லை. அடுத்ததாக இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்த நடிகை ஓவியாவிடம் ரசிகர் ஒருவர் 'உங்களுக்கு எப்போது திருமணம்' என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்க்கு பதிலளித்த ஓவியா 'நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை. ஏன் இந்த கேள்வியை கேட்டு உயிரை எடுக்குறீங்க' என்று கூறியுள்ளார்.