வாய்ப்பு கிடைக்காததால் இப்படி இறங்கிவிட்டாரா? வைரலாகும் நடிகை ஓவியாவின் வீடியோ...

biggboss oviya webseries biggbosstamil merlin
By Edward Jun 04, 2021 06:46 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் பிரபலங்களாகி பின் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்து பிரபலமாகுபவர்கள் ஒருபக்கம். ஆனால் சில படங்கள் நடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருப்பவர்கள் மறுப்பக்கம்.

அப்படியாக நிலையில் தள்ளப்பட்டவர் நடிகை ஓவியா. தமிழ் சினிமாவில் ஒருசில படங்களால் அறிமுகமாகி பேசப்பட்ட ஓவியா பின் படங்கள் கிடைக்காமல் திணறினார். இதையடுத்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தார்.

100நாட்கள் நிகழ்ச்சியை தொடர்ந்திருந்தால் அவர்தான் டைட்டில் வின்னர் என்று கூறுமளவிற்கு பேசப்பட்டவர் ஓவியா. இதையடுத்து சில படங்களில் கமிட்டாகினாலும் அப்படத்தின் தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நடிகை ஓவியா வெப் சீரிஸ் பக்கம் சென்றுள்ளாராம்.

அப்படியாக மெர்லின் என்ற வெப்சீரிஸ் படத்தில் நடித்து ஜுன் 5ல் வெளியாகவுள்ளது என்று ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ லிங்க் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.