சிம்பு வீட்டுக்கு நான் தினமும் போயிட்டு வரேனா? கடுப்பான நடிகை ஓவியா..

Silambarasan Oviya
By Kathick Jun 21, 2022 01:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஓவியா. இவர் விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதன்பின், பல படங்களில் நடித்து வந்த ஓவியா, பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு, தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதளவில் ஓடாத காரணத்தினால், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஓவியா, கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் ஓவியாவிடம் நடிகர் சிம்பு பற்றி எங்களுக்கு தெரியாத சில விஷயங்களை கூறுங்கள் என்று கேள்வி கேட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓவியா, சிம்புவுக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளார்கள்.

அதில் சிலர் பிரேக் அப் ஆகி விட்டார்கள். இதன்பின், வேறு எதாவது சிம்புவை பற்றி கூறுங்கள் என்று கேட்டபோது, கடுப்பான நடிகை ஓவியா, நான் என்ன சிம்பு மனைவியா? சிம்புவின் வீட்டுக்கு தினமும் போயிட்டு இருக்கேனா? என்று பதிலளித்துள்ளார். இது சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவமாக இருந்தாலும், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.