வாயை கொடுத்து மாட்டும் நடிகை! என்னையும் கைது செய்யுங்கள் என்று பிக்பாஸ் ஓவியா போட்ட டிவிட்டால் பரபரப்பு!
தமிழ் சினிமாவில் மலையாள நடிகையாக களவாணி படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை ஓவியா. பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பெரியளவில் பேசப்படாமல் இருந்து படவாய்ப்பினை பெறவில்லை.
இதையடுத்து தன் மார்க்கெட்டை தூக்கி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று தன் பெயரை ஊரறிய செய்தார். நிகழ்ச்சியில் தன்னை கார்னர் செய்தவர்களை எதிர்த்து பேசி, பின் பல லட்சகணக்கான மக்களின் ஆதரவை அன்பை எங்கு சென்றாலும் பெற்று வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியால் பல படங்களில் நடித்து வெளியாகியும் கமிட்டாகி நடித்தும் வருகிறார். சமுகவலைத்தளத்தில் எப்போவாவது தலை காட்டும் ஓவியா சர்ச்சையாக பேசி டிரெண்டிங்காகிவிடுவார். அந்தவகையில் டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்தவர்களையும் போஸ் ஒட்டியவர்களை கைது செய்து சிறையொல் அடைத்தனர்.
இதனால் பலர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில், இது ஜனநாயக நாடா என்று கேள்வி எழுப்பியதோடு என்னையும் கைது செய்யுங்கள் என்று #ArrestMeToo என்ற ஹாஸ்டேக்கினையும் பதிவிட்டு குரல் கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலருன் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Is this democracy or democrazy ???#ArrestMeToo
— Oviyaa (@OviyaaSweetz) May 16, 2021