ஓவர் குடி, தற்கொலைக்கு முயற்சி!! பா. ரஞ்சித் கூறிய அதிர்ச்சி தகவல்
பா. ரஞ்சித்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இயக்குனராக மட்டுமின்றி அரசியல் களத்தில் முக்கியமான செயல்பாட்டாளராகவும் உள்ளார்.
தற்போது, இவருடைய நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பாட்டில் ராதா என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
அதிர்ச்சி தகவல்
இதில், பா. ரஞ்சித் அவருக்கு தற்கொலை எண்ணம் வந்தது குறித்து சில அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். அதில், " இந்தப் படத்தில் வரும் அஞ்சலை கதாபாத்திரம் தான் என் அம்மா.
எனது அப்பா உணவுக்காகவோ, பணத்திற்காகவோ யாரிடமும் கொண்டு போய் என்னை நிறுத்தியது கிடையாது. ஆனால், குடி என்று வந்து விட்டால் அவர் அனைத்தையும் மறந்து விடுவார்.
ஒரு திருவிழா வந்தால், ஊரே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், என் அம்மா மட்டும் அழுது கொண்டே இருப்பார். என் அம்மா அழுவதை என்னால் பார்க்கவே முடியாது.
இதனால் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என எல்லாம் யோசித்து உள்ளேன். அதனால், எனது மனைவியும், குழந்தைகளும் அழக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என கண் கலங்கியபடி பேசினார்.