பீப் கறியும் உணவு தானே.. நான் சாப்பிடுவேன் என்று ஓப்பனாக கூறிய பா ரஞ்சித் பட நடிகை..
தமிழ் சினிமாவில் பெரியளவில் பிரபலமாகி பல வெற்றிப்படங்களை இயக்கி வெற்றிக்கண்டவர் பா ரஞ்சித். நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தினை இயக்கிய பா ரஞ்சித்தின் தற்போது வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன், அசோக் செல்வன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் ரெனே என்ற கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பீப் சாப்பாடு சாப்பிடுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
படத்தில் பீப்கறி பத்தி பேசியிருப்பது பற்றி கேட்டதற்கு, நானும் அந்த சாப்பாட்டை சாப்பிடுவேன். அதுவும் சிக்கனை போன்ற ஒரு உணவு தானே.
இதுபற்றி கேள்விகளில் எனக்கு உடன்பாடில்லை. தயிர் சாதன் பிடிப்பவர்கள் தயிர்சாதம் சாப்பிடலாம், பீப் பிடித்தவர்கள் பீப் சாப்பிடலாம் இதிலென்ன பிரச்சனை என்று கூறியுள்ளார்.