படையப்பா வாய்ப்பு..ரஜினி சார் அப்படித்தான் நடந்து கொள்வார்!! செளந்தர்யா என்ன சொல்லி இருக்காங்க...
படையப்பா
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், லட்சுமி, மணிவண்ணன், செந்தில், செளந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் 1999ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்ட படம் தான் படையப்பா.

கடந்த டிசம்பர் 12 ஆம்தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படையப்பா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது வரை படையப்பா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.
படையப்பா படத்தில் நடித்தபோது நடந்த சில அனுபவங்களை, மறைந்த நடிகை செளந்தர்யா பகிர்ந்து கொண்ட பேட்டி வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

நடிகை செளந்தர்யா
அதில் நடிகை செளந்தர்யா, ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் நடித்து முடித்தபோதே இதுபோதும் என்று தான் இருந்தேன். ஆனால் படையப்பா படவாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
அந்த வாய்ப்பு வந்தபோது என்ன ரியாக்ட் செய்வது என்றே எனக்கு தெரியவில்லை. ரஜினிகாந்த், ரொமபவே எளிமையாக பழகக்கூடியவர். அவருடன் பணியாற்றுபவர்களை ரொம்பவே கம்ஃபர்டபிளாக வைத்துக்கொள்வார் என்று செளந்தர்யா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.