வாய் இருப்பதால் எது வேணாலும் பேசலாமா? பாகிஸ்தான் வீரருக்கு இந்திய வீரர்கள் பதிலடி

worldcup t20worldcup indiavspakistan
By Edward Oct 08, 2021 10:00 AM GMT
Report

இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக அந்த பிரச்சனை வலுத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஐபிஎல் போட்டி முடிவடையவிருப்பதால் அனைத்து அணியினரும் தீவிரமாக டி20 உலககோப்பைக்காக தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியால் பாகிஸ்தான் அணியை வெல்ல முடியாது.

எல்லா வகையிலும் இந்தியாவை விட பாகிஸ்தான் அணியில் பலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர் என மார்தட்டிக் கூறுகிறார் அப்துல் ரசாக். அதுமட்டுமின்றி இந்திய அணி, பாகிஸ்தானுடன் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் தோல்வியடையும் எனவும் கூறியுள்ளார். எப்பொழுதுமே அப்துல் ரசாக்கிற்கு, இந்திய அணியை வம்பிழுத்து பார்ப்பதில் ஒரு அளவுகடந்த பிரியம்.

இதற்கு முன்னர் பலமுறை இந்த மாதிரி வார்த்தைகளை விட்டு வாயில் புண் பட்டு சென்றிருக்கிறார். ஒருமுறை ஜஸ்பிரித் பும்ராவை குழந்தை பவுலர் என்றும், ஹர்திக் பாண்டியாவை தம்மிடம் வந்து ட்ரெய்னிங் எடுக்குமாறும் கூறி வம்பிழுத்தார். அப்போதே இதற்கு விரேந்தர் சேவாக், கௌதம் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இப்பொழுதும் இந்திய அணியை வம்பிழுக்கும் வகையில் அப்துல் ரசாக் பேசியுள்ளார். இதற்கு இந்திய அணியின் பல முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்