நாங்க தெருவில் கிரிக்கெட் விளையாடுறவங்க இல்ல!! பதிலடி கொடுத்த பாகிஸ்தான் வீரர்..
2024 ஆண்டிற்கான டி20 உலக கோப்பை போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 6 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஏ பிரிவில், இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் அமெரிக்காவா? பாகிஸ்தானா? என அடுத்து யார் தகுதி பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தது. நேற்று நடைபெறவிருந்த அமெரிக்கா - அயர்லாந்து போட்டி மழைக் காரணமாக நடக்காமல் போனதால் புள்ளிப்பட்டியலில் அதிக மதிப்பெண் வைத்திருந்த அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதனால் பாகிஸ்தான் அணி தகுதி பெறாமல் எலிமினேட் ஆனது. இதனை பலரும் கலாய்த்து கேலி செய்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஒரு கருத்தினை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்றாக நாங்கள் விளையாடும் போது ஆதரவு அளிப்பார்கள், ஆனால் எங்களுடைய கடினமான நேரத்தில் மட்டும் தான் உண்மையான ரசிகர்கள் துணை நிற்கிறார்கள். நாங்கள் ஒன்றும் தெருவில் விளையாடும் கிரிக்கெட் அணி கிடையாது. இது உங்களுடைய பாகிஸ்தான் அணி, எங்களுக்கு நீங்கள் இது போன்ற சூழலில் ஆதரவு அளிக்கவில்லை என்றால் நீங்களும் மீடியா போல் தான்.
இப்போது வரை நான் 140 கிலோமீட்டர் வேகத்தில் தான் வீசுகிறேன். விக்கெட் எடுத்தால் பாராட்டுகிறார்கள், எடுக்கவில்லை என்றால் விமர்சிக்கிறார்கள் என்று ஷாகின் ஷா அப்ரிடி கூறியிருக்கிறார். ஏற்கனவே ஒரு போட்டியில் ஒரு வாரில் சுமார் 21 ரன்கள் விட்டுக்கொடுத்ததை வைத்து ஷாகின் ஷா அப்ரிடியை ரசிகர்கள் கலாய்த்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.