இப்பத்தான் கல்யாணம் ஆச்சு, கழுத்துல தாலிகூட புதுசா தொங்குது!! ஜூலியை வெளுத்த சீரியல் நடிகர்..
பிரபலம் ஜூலி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேலூர் கூட்டத்தில் குட்டி ஸ்டோரி சொன்னது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. விஜய் பேசியது குறித்து பிக்பாஸ் பிரபலம் ஜூலி, எதிர்வினை கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின் தன்னை விஜய் ரசிகர்கள் மிரட்டுவதாகவும் கூறி மற்றொரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.

நடிகர் பழனியப்பன்
தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் ரோலில் நடித்து வரும் நடிகர் பழனியப்பன் ஜூலியின் அந்த வீடியோவிற்கு அறிவுரை கூறும்படியான வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில், அரை மணி நேரம் பேசின அந்த மனுஷனுக்கு பேச தெரியலையா? அந்த மனுஷன் கூட நீங்க நடிச்சிருக்க வாய்ப்பே இல்லை, ஆனால் விஜய் எத்தனை பக்க ஸ்கிரிப்ட் கொடுத்தாலும் உடனே நடிக்கக் கூடியவர்.
எவ்வளவு பெரிய லெந்தான டான்ஸ் ஸ்டெப்பா இருந்தாலும் அதை அப்படியே ஆடும் கற்பூர புத்தியுள்ளவர். இதெல்லாம் சினிமாக்காரர்களுக்கு தெரியும் என்று கூறினார்.

நீங்க போராடி தான்
மேலும், நீங்க பேசுறது தப்பு இல்ல, ஆனா ஜல்லிக்கட்டு நீங்க போராடி தான் ஜல்லிக்கட்டு கிடைச்ச மாதிரி ஒரு வார்த்தையை விட்டிங்கம்மா. அந்த போராட்டத்திற்காக எத்தனை ஆட்டோ டிரைவர்ஸ், எத்தனை ஸ்டூடண்ட், எத்தனை மாணவர்கள், தமிழ் திரைப்படக் குழுவினர்கள், நாங்க எல்லோருமே சேர்ந்து தான் போராடினோம். லட்சக்கணக்கான கைகள் தூங்கியதால் அந்த போராட்டம் வெற்றி பெற்றது. ஆனா எதோ நீங்களே போராட்டம் பண்ணி அந்த ஜல்லிக்கட்டை வாங்கின மாதிரி பேசுறீங்க.
நீங்க அரசியல் பேசுங்க தப்பு இல்ல, ஆனால் விஜய் பற்றி பேசுறதுக்கு நீங்க என்ன சாதிச்சு இருக்கீங்க? ஒருத்தவங்களை பற்றி பேசணும்னா, நாம அவங்களவிட கொஞ்சமாவது சாதிச்சிருக்கணும், நான் இப்ப விஜய் பற்றி பேசுறதா இருந்தா கூட, நான் ஏதாவது சாதிச்சிருந்தா தான் பேச முடியும். இது பாப்புலர் ஆவதற்காக ஒரு ஸ்டாண்ட்.

கழுத்துல தாலிகூட
உங்களுக்கு இப்பத்தான் கல்யாணம் ஆச்சு, கழுத்துல தாலிகூட புதுசா தொங்குது, நீங்க உங்க திருமண வாழ்க்கையை பாருங்க. தவெகவில் இருக்கிறவங்க மைனர் என்று சொல்லி இருக்கீங்க, ஆனா அதுல லட்சக்கணக்கான பேருக்கு ஓட்டு இருக்குமா? இதை சொல்றதால நான் தவெக கட்சிக்காரன்னு நினைச்சுக்காதீங்க, நான் அப்படியெல்லாம் இல்ல, ஒரு சக நடிகனுக்காக தான் நான் குரல் கொடுத்து இருக்கிறேன் என்று பழனியப்பன் தெரிவித்துள்ளார்.