பிஸியான ஷூட்டிங் வேலை...48 நாட்கள் போராடிய கணவரின் மரணம்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் மறுப்பக்கம்..

Serials Tamil Actress Actress Pandian Stores
By Edward Mar 20, 2026 07:11 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் மயிலின் அம்மாவாக நடிகை கெளதமி வேம்புநாதன் நடித்து வருகிறார். திரையில் வில்லியாக கடுமையாக தோன்றும் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த துயரம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

பிஸியான ஷூட்டிங் வேலை...48 நாட்கள் போராடிய கணவரின் மரணம்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் மறுப்பக்கம்.. | Pandian Stores 2 Serial Actress Emotional Story

கெளதமி வேம்புநாதன்

அதாவது, கெளதமி காலையில் சூட்டிங்கிற்கு கிளம்பும்போது அவருடைய கணவர் நல்லபடியாக இருந்திருக்கிறார். ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து ஒரு அழைப்பு வந்து அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதாவது, தன் கணவர் கிளம்பும்போது ஒரு பெண்ணின் திருமணத்தை நடத்தி வைக்க போகிறேன் என்று என்று சொல்லியிருக்கிறார். ஆனால் திடீரென ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனையால் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது.

அந்நேரத்தில் கெளதமி ஹாஸ்பிடலுக்கு போய் பார்த்ததும் டாக்டர்கள் உங்கள் கணவருக்கு இதயத்தில் அடைப்பு இருக்கிறது, உடனே அறுவை சிகிச்சை பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பிஸியான ஷூட்டிங் வேலை...48 நாட்கள் போராடிய கணவரின் மரணம்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் மறுப்பக்கம்.. | Pandian Stores 2 Serial Actress Emotional Story

ஒருபக்கம் உயிர் போராட்டம், மறுப்பக்கம் வேலை பொறுப்பு. அந்நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளார் கெளதமி. அந்த சமயத்தில் தயங்கி நிற்கும்போது மருத்துவமனையில் முழுப்பொறுப்பையும் அவரது மருமகள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

48 நாட்கள் போராடிய கணவரின் மரணம்

மருமகள் எனக்கு கிடைத்த பெரிய வரம் என்று கெளதமி பேட்டியொன்றில் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். பின் ஷூட்டிங்கின் பிரேக் நேரத்தில் ஹாஸ்பிடலுக்கு வந்துள்ளார்.

ஹாஸ்லிட்டலில் இருந்தால், ஷூட்டிங் கேன்சல் ஆகும், தயாரிப்பு மற்றும் சீரியல் டீமுக்கு அதிகமான நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று நடித்துமுடித்துள்ளார்.

பிஸியான ஷூட்டிங் வேலை...48 நாட்கள் போராடிய கணவரின் மரணம்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் மறுப்பக்கம்.. | Pandian Stores 2 Serial Actress Emotional Story

மறுப்பக்கம் ஆபரேஷன் நடந்துள்ளது. அதன்பின் 48 நாட்கள் உயிருக்கு போராடிய கணவர் இறுதியில் உயிரிழந்தாராம்.. அவறு கூறுகையில், என் கணவர் அவருடைய உடம்பை முன்னாடியே கவனிச்சிருந்தால், இப்படி ஆகிருக்காது..கவனிக்க நினைத்த நேரத்தில் எல்லாமே கைவிட்டுப்போச்சு.

ஷூட்டிங்கில் நான் சிரிப்பேன், சில சமயம் மிரட்டுவேன், ஆனால் கேமரா ஆஃப்பானதும் உள்ளே ஒரு பெரிய தனிமை இருக்கும் என்று வலியுடன் தெரிவித்துள்ளார் நடிகை கெளதமி வேம்பு நாதன்.

பிஸியான ஷூட்டிங் வேலை...48 நாட்கள் போராடிய கணவரின் மரணம்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் மறுப்பக்கம்.. | Pandian Stores 2 Serial Actress Emotional Story