கர்ப்பமான தங்கமயில்..யாரு குழந்தைன்னு கேட்ட சரவணன்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பிரமோ..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. நேற்றைய எபிசோட்டில் குமார் திருமணத்தை தன்னுடைய அம்மா காந்திமதி தான் நிறுத்தினார் என்பதை அறிந்து கொண்டு சக்திவேல் கோபப்பட்டுள்ளார்.

இன்னொரு பக்கம், எனக்கு நிச்சயதார்த்தம் நின்றது சந்தோஷம் தான் என்று பழனியிடம் குமார் சொல்ல, அரசிக்கும் சந்தோஷம் தான் என்று பழனியும் குமாரிடம் சொல்ல, சக்திவேல் வீட்டில் இருக்கும் ஆத்தாவிடம் கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியே துறத்த முற்படுகிறார்.
கர்ப்பமான தங்கமயில்
இப்படி சென்று கொண்டிருந்த எபிசோட்டில் இன்றைய பிரமோவில், தங்கமயில் கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்தை மாமா சரவணனிடம் கூற கோவில்லுக்கு செல்கிறார் தங்கமயில்.

ஆனால் சரவணனோ, யார் குழந்தை இது என்று கூறி தங்கமயில்லுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இதனால் தங்கமயில் என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே நிற்கிறார். இதன் பிரமோ வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.