இப்படி இருக்கணும்!! கண்டீசன் போட்ட காதலனை பிரிய இதுதான் காரணம்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா..
சின்னத்திரை சீரியல் நடிகையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை லாவண்யா. முல்லையாக கவர்ந்து வந்த லாவண்யா, மாடல் நடிகையாக இருந்து சீரியல் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில் தனக்கு 2, 3 முறை அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்துள்ளது என்று ஓப்பனாக பேசியிருந்தார். அதேபோல் மாடலிங் செய்வதுற்கு முன் டியூஷன் டீச்சராகவும், வங்கியில் வேலை செய்து வந்ததாக கூறினார்.
மேலும், காதலருடன் பிரேக்கப் நடந்தது குறித்தும் பகிர்ந்திருக்கிறார். அதில், 2 வருடத்திற்கு முன் வங்கியில் வேலை செய்தபோது ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். பொதுவாக பசங்கள், ஒரு பெண்ணை பிடித்திருந்தால் அவங்க எப்படி இருக்காங்களோ அப்படி ஏத்துக்கொள்வதை தான் நான் பார்ப்பேன்.

வாய்ப்புக்காக 5 நிமிஷம் 30 நிமிஷத்துக்கு நடிகைகள் அதை செய்றாங்க!! பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகர்..
ஆனால், நீ இப்படி இருந்தா தான் எனக்கு பிடிக்கும் என்று கண்டீசன் போடுவது தப்பு. வங்கியில் வேலை செய்த போது நான் என்ன பண்ணாலும் சரியாக இருந்தது.
ஆனால் வங்கியில் இருந்து மாடலிங் போனது அவருக்கு பிடிக்கவில்லை என்றால் நான் ஒன்னும் பண்ண முடியாது. என் வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு போக அது எனக்கு தடையாக இருக்கக்கூடாது என்று நினைத்து தான், அவரை பிரேக்கப் செய்ததாக லாவண்யா தெரிவித்திருக்கிறார்.