நைட் பார்ட்டிக்கு ரூ.35 லட்சமா?.. நடிகை கயாடு லோஹர் போட்டுடைத்த உண்மை!
கயாடு லோஹர்
இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர்.
இவர் மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக இதயம் முரளி படம் தமிழில் உருவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்த டாஸ்மாக் ஊழலில் கயாடு லோஹர் பெயர் அடிபட்டது. அந்த ஊழலில் தொடர்புடையவர்கள் நடத்திய பார்ட்டிகளில் கலந்துகொள்ள நடிகை கயாடு லோஹர் ரூ.35 லட்சம் பெற்றதாக செய்திகள் பரவின.

போட்டுடைத்த உண்மை!
இதை மறுத்த கயாடு பதில் தெரிவித்தார். அதில், "எந்தவித பின்புலமும் இன்றி சினிமாவுக்கு வந்த என் மீது களங்கம் ஏற்படுத்துகின்றனர். தூக்கத்தில்கூட இது நினைவுக்கு வருகிறது.
இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நான் சினிமா பின்னணியில் இருந்து வரவில்லை என்பதால், என்னை போன்ற கலைஞர்கள் மீது எளிதில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால் அது எல்லை மீறக்கூடாது" என கயாடு கண்கலங்கி தெரிவித்துள்ளார்.