வாரிசு பட இயக்குனரால் அவமனப்பட்டு நொருங்கிப்போன சீரியல் நடிகர்.. விஜய்க்கு தெரியாமல் நடந்த சர்ச்சை சம்பவம்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நடிகர் ரவிச்சந்திரன். மீனாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் கும்பகோணத்தில் மசாலா கம்பெனி நடத்தி குடும்ப வறுமைக்காக 3 கோடி அளவில் நஷ்டத்தை சந்தித்தார்.
அதன்பின் ஊரைவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்த அவர் சில விளம்பர படம் நடித்து பின் விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். ஒருசில படங்களில் நடித்துள்ள ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தான் நிராகரித்து அசிங்கப்படுத்திய சம்பவம் ஒன்றினை மனம் நொந்து கூறியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் பெரிய ஸ்டார் படத்தின் வாய்ப்பிற்காக கால் செய்து கூப்பிட்டாங்க. இயக்குனரை சந்தித்து 5 நாள், சம்பளம் எல்லாம் பேசியாச்சி. நாளைக்கே ஷூட்டிங்கிற்கு வரசொல்லிட்டாங்க. நாளை பாண்டியன் ஸ்டோர்ஸ் டேட் இருப்பதை கூறினேன். பெரிய வாய்ப்பு போங்க என்று சீரியலில் கூறிவிட்டு அடுத்த நாள் அங்கு சென்றேன்.
இதை என் மனைவியிடம் கூறாமல் என் மகளிடம் தான் 5 நாளில் ஒரு நல்ல விசயம் சொல்கிறேன் என்று கூறினேன். எதுவாக இருந்தாலும் என் மகளிடம் தான் கூறிவேன். அவள் தான் என் மனைவியிடம் கூறுவாள் என்று தெரிவித்தார். அடுத்த நாள் அந்த இடத்திற்கு போனேன், வாரிசு பட ஷூட்டிங் தான்.
இயக்குனரை சந்திக்க அவர் முன்னாடி சென்றேன். அவர் என்னை மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு உதவி இயக்குனரிடம் ஏதோ ஒன்றினை கூறினார். அந்த உதவி இயக்குனர் உங்களை சார் கிளம்ப சொல்லிட்டாருன்னு சொன்னார்.
ஏன் என்ன ஆச்சி என்று கேட்டதற்கு உங்கள் லுக் ரிச்சா இருக்காம். லுக் பிரச்சனை என்றால் மேக்கப்ல சரி செஞ்சிடலாமே என்று சொன்னதை காலில் வாங்காமல் இருந்தார். இந்த விசயம் விஜய் சாருக்கு தெரிந்திருந்தால் அவர் சும்மா விட்டு இருக்க மாட்டார்.
ஆனால், நான் அப்படி செய்யாமல் மற்றவர்களின் கேரியர் போய் விடும் என்று மன கஷ்டத்தில் அங்கிருந்து வந்துட்டேன். இந்த நிமிடம் வரை அதை நினைத்தால் கண்ணுல தண்ணி தான் வருது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் ரவிச்சந்திரன்.