பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா - அருண் திருமணம் எப்போது தெரியுமா, இதோ
பிக் பாஸ் 8 சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆனார். இவருடைய வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பிக் பாஸ் 7வது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்து, டைட்டில் வின்னர் ஆனவர் நடிகை அர்ச்சனா.
இவர் சின்னத்திரையில் பிரபலமானவர் என்பதை அறிவோம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெள்ளித்திரையிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. மேலும் பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக பங்கேற்று 98 நாட்களுக்கு பின் வீட்டை விட்டு வெளியேறியவர் அருண்.
அர்ச்சனா மற்றும் அருண் இருவரும் காதலித்து வருகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் தான் இது அனைவருக்கும் தெரியவந்தது.
இந்நிலையில் அருண் அளித்த சமீபத்திய பேட்டியில் தங்கள் திருமணத்தை விரைவில் நடத்த வீட்டில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த வருடத்திற்குள் திருமணம் செய்ய திட்டமிட்டு வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் விரைவில் அருண் - அர்ச்சனா ஜோடி திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.