பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சரண்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் தங்கமயில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சரண்யா துராடி. இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சரண்யாவுக்கு திருமணம் ஆகி 5 வருடம் நிறைவடைந்துவிட்டதாம், அதை தனது கணவர் உடன் கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். 2019ல் தான் ராகுலை சரண்யா சந்தித்து இருக்கிறார். 2020ல் காதலிக்க தொடங்கி, 2021ல் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
லாக்டவுனில்தான் தங்கள் திருமணம் நடந்தது என குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை சரண்யா. ராகுல் போட்டோகிராபர் ஆக பணியாற்றுவது மட்டுமின்றி ஒரு பிரியாணி ஹோட்டலையும் நடத்தி வருகிறாராம்.