சோலி முடிஞ்சிப்போச்சி.. பாட்டு பாடி அசத்திய பாக்யாவை சைட் அடித்து ராதிகாவிடம் மாட்டிக்கொண்ட கோபி...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி தொடர். இல்லத்தரசிகளை பற்றி மையமாக வைத்து எடுத்து வரும் இந்த சீரியலில் சமீபத்தில் பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு காதலி ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் கோபி.

பாக்யாவை சைட் அடித்த கோபி
இந்த வார எபிசோட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மஹாசங்கமம் ஒளிப்பரப்பாகி வருகிறது. பாக்யாவை விட்டுவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட விசயத்தை மூர்த்தி குடும்பத்தினர் அறிந்து கொண்டு கோபியை கடுமையாக திட்டியும் ராதிகாவை அவமானப்படுத்திவிட்டும் சென்று விடுகிறார்கள்.
இனி வரும் காட்சியின் பிரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ரெசாட்டில் தங்கியிருக்கும் பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பாட்டு ஆட்டம் என்று கும்மாளம் போட்டுள்ளனர்.
ராதிகா கோபம்
அங்கு வந்த கோபியும் ராதிகாவும் ஜோடியாக உட்கார்ந்துள்ளனர். அப்போது பாக்யா ஒரு பாடல் பாடியதை பார்த்த கோபி அதை ரசித்தபடி சைட்டடித்துள்ளார்.
பின் பாக்யா பாடி முடித்தது கைத்தட்டியதை பார்த்த ராதிகா கோபியை பார்த்து முறைக்கிறார். அப்படியே சென்றால் இரு குடுத்தனம் நடுத்திடுவார் கோபி என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.