என்னுடைய அந்த இடத்தை Zoom செய்து மோசமாக எடிட் பண்ணாங்க.. பனிமலர் பன்னீர்செல்வம் பேட்டி

Sexual harassment Serials Tamil TV Serials Actress
By Dhiviyarajan Nov 28, 2023 10:00 AM GMT
Report

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வரிசையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் தான் பனிமலர் பன்னீர்செல்வம். மேலும் இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறார்.

என்னுடைய அந்த இடத்தை Zoom செய்து மோசமாக எடிட் பண்ணாங்க.. பனிமலர் பன்னீர்செல்வம் பேட்டி | Panimalar Panneerselvam Open Talk

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பனிமலர் பன்னீர்செல்வம் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் பேசுகையில், ஒரு முறை புடவை விளம்பர வீடியோவில் நான் அப்படி இப்படி திரும்பும் போது என்னுடைய வயிறு மற்றும் மார்பு பகுதிகளை Zoom செய்து மோசமாக எடிட் செய்து டிவிட்டரில் பதிவேற்றி விட்டார்கள்.

நான் உடனே என்னுடைய நண்பரிடம் இந்த விஷயம் தொடரபாக அழுது கொண்டு சொன்னேன். என்ன தான் நான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் இது போன்ற நிகழ்வுகளில் நிலைகுலைந்து தான் போகிறேன் என்று பனிமலர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.