விருது விழாவிற்கு இப்படியொரு ஆடையில் 21 வயது நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்
குழந்தை நட்சத்திரங்கள் இளம்நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ஆடைகளை அணிந்து போட்டோஷூட் எடுத்து படவாய்ப்புகளை பெறுகிறார்கள். அந்தவரிசையில் இருப்பவர் எஸ்தர் அனில். நல்லவன் என்ற மலையாள படத்தில் 10 வயதின் போது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.

இதையடுத்து குழந்தை நட்சத்திரம் என்றால் மலையாள படங்களில் இவர் தான் என்று இருப்பார். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் அவருக்கு மகளாக நடித்தார்.
அதன் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் - கெளதமி மகளாக நடித்து பிரபலமானார் எஸ்தர் அனில். இதையடுத்து போட்டோஷூட் பக்கம் திரும்பிய எஸ்தர் படுமோசமான ஆடையை அணிந்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். இந்நிலையில் பிரபல திரைப்பட விருதான SIIMA 2022 சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி சென்றிருந்த எஸ்தர் கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார். இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.




