பராசக்தி படத்தின் கதை திருட்டு கதையா? வெளியிட தடை? ரசிகர்கள் அதிர்ச்சி
Sivakarthikeyan
Parasakthi
By Kathick
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் பராசக்தி.
இப்படம் வருகிற 2026 ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், 'பராசக்தி' தன்னுடைய 'செம்மொழி' என்ற கதையை திருடி எடுக்கப்பட்டு இருக்கிறது என இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். கதை திருட்டு புகார் பற்றி விசாரித்து ஜனவரி 2ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.