பராசக்தி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Box office Parasakthi
By Kathick Jan 18, 2026 04:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளிவந்த அமரன் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து ரூ. 340 கோடி வசூல் செய்தது.

ஆனால், இதன்பின் வெளிவந்த மதராஸி படம் அந்த அளவிற்கு வசூல் செய்யவில்லை. இது சற்று ஏமாற்றத்தை தந்தது.

பராசக்தி படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Parasakthi Movie Worldwide Collection Report

ஆனால், பராசக்தி படம் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளிவந்த பராசக்தி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் வசூலும் அடிவாங்கியது.

இந்த நிலையில், 8 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள பராசக்தி படம் உலகளவில் ரூ. 81 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிக குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது.