சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் பராசக்தி. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

இப்படத்தின் மூலம் சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் முதல் முறையாக கைகோர்த்தனர். இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்க ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் வசூலில் அடிவாங்கியது. பராசக்தி படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பராசக்தி படத்தின் இறுதி வசூல் ரூ. 90 கோடி என திரை வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால், படக்குழு இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.