தமன்னா நடனம் தான் ரஜினி படத்தின் வெற்றிக்கு காரணமா.. மறைமுகமாக தாக்கினாரா பார்த்திபன்
Tamannaah
R. Parthiban
By Karthick Raja
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்து கொண்டார். இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அந்த பேட்டிகளில் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிலையில், ஒரு பேட்டியில் பேசிய பார்த்திபன் "ஒரு படம் நல்லா ஓடுறதுக்கு மிகப்பெரிய வெற்றிகரமான காரணமாக தமன்னாவின் நடனம் அமைந்துவிடுகிறது. அதற்கு பிறகு தான் அப்படத்தில் இருக்கும் கதை" என பேசியுள்ளார்.

பார்த்திபன் கூறியது ரஜினியின் ஜெயிலர், படத்தையும், சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தையும் என கூற நெட்டிசன்கள் இதனை வைரலாக்கி வருகிறார்கள். ஆனால், பார்த்திபன் படத்தின் பெயர்களை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.