3-வது மனுஷியின் 3-ம் தரமான 'டுவிட்' !!மிரட்டலுக்குபின் பார்த்திபன் ஆதங்கம்..

Vijay Trisha R. Parthiban Gossip Today
By Edward Mar 10, 2026 05:45 AM GMT
Report

பார்த்திபன்

தமிழகத்தில், சமீபத்தில் விஜய் - திரிஷா இருவரும் திருமணத்துக்கு சென்றது பெரிய பேசுபொருள் ஆனது. இதுகுறித்து பலரும் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இயக்குநர் பார்த்திபன் அவர்கள் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் குந்தவை கொஞ்ச நாள் வீட்டிலேயே குந்த வைப்பது நல்லது என சொன்னார். இதற்கு திரிஷா பதிலடி கொடுக்க, பார்த்திபன் அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

3-வது மனுஷியின் 3-ம் தரமான

நான் மன்னிப்பு கேட்டிருக்கக் கூடாது

இந்நிலையில் இயக்குநர் பார்த்திபன் மீண்டும் ஒரு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், விஜய் அவர்கள் பல பிரச்சனைகளை கடந்துள்ளார். அரசியல் என்பது சாதாரணம் இல்லை, அதெல்லாம் கடந்து வந்த நிலையில், இவ்வளவு பாதிப்புக்கு காரணமாக இருந்த அந்த நிகழ்ச்சி. அந்தப் பெண்மணி கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அதை சொல்வதற்காக நான் அங்கு வரவில்லை.

3-வது மனுஷியின் 3-ம் தரமான

திரிஷா வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று நான் சொன்னது என் ஆதங்கம் தான். சமுத்திரகனியும் ஆதங்கத்தின் வெளிப்பாடாகத்தான் இதை பேசினார்.

ஆனால் நான் வருத்தம் தெரிவித்து சில நிமிடத்தில், 3வது மனுஷியோட 4-ஆம் தரமான டிவிட் பார்த்தப்பின் நான் மன்னிப்பு கேட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது.

நீங்கள் ஏன் வருத்தம் தெரிவித்தீர்கள் என்று என்னிடம் கேட்கும் நண்பர்களும் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் என்னுடன் நிற்பவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் என காட்டமான பதிலை அளித்துள்ளார் பார்த்திபன். தற்போது அவரின் அந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.