பார்த்திபன் கொடுத்த பேட்டி!! குடும்பத்தில் மீண்டும் ஏற்பட்ட பூகம்பத்தால் ஓடிவந்த சீதா மகள்..
முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் பார்த்திபன், டீன்ஸ் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு தனிப்பட்ட மற்றும் சினிமா சம்பந்தமான விஷயங்களை பகிர்ந்து வந்துள்ளார். ஆனால் முன்னாள் மனைவி நடிகை சீதா பற்றி வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்து வந்தார்.

ஆனால் அவர் நடித்த சொர்ணமுகி படத்தை பற்றியும் நடிகை சீதாவை பற்றியும் கம்பேர் செய்து பகிர்ந்திருக்கிறார் பார்த்திபன். சொர்ணமுகி படத்தில் பார்த்திபனும் ஹீரோயினும் காதலிக்க ஒரு கட்டத்தில் ஹீரோயினுக்கு வேறொரு நபர் மீது காதல் வர, அதனால் பார்த்திபன் ஹீரோயினை விட்டு ஒரேடியாக விலக நினைப்பதை பார்த்திபன் பேட்டியில் வேறுவிதமாக கூறியிருக்கிறார்.
இப்படி பார்த்திபன் கூறியதை வைத்து பத்திரிக்கையில் அவருடைய நிஜ வாழ்க்கையில் இப்படி நடந்திருக்குமோ என்று செய்தி எழுந்தி இருந்தார்களாம். இதை பார்த்த சீதா அதிர்ச்சியடைந்து, தன் மகளிடம் இதுபற்றி கூறி வருத்தமடைந்திருக்கிறார். உடனே சீதா மகள் பார்த்திபனுக்கு கால் செய்து ஏன் இவ்வாறு பேசினீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு பார்த்திபன் நான் அப்படி பேசவில்லை இரு விஷயத்தை பத்திரிக்கையில் வெளியிட்டு இருக்கிறார்கள். சீதா இதனால் வருத்தப்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறாராம். இப்படி பார்த்திபன் பேசியது மீண்டும் அவரது குடும்பத்தில் புது பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video