விஜய் அரசியலில் ஜெயிப்பாரா, இல்லையா?.. பார்த்திபன் பரபரப்பு பேச்சு!
தனுஷ்
நடிகராக மட்டுமின்றி சமீபகாலமாக இயக்குநராகவும் கலக்கி வருகிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ராயன் படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த ஆண்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளிவந்தது.
ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. நான்காவதாக தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இட்லி கடை.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.
பரபரப்பு பேச்சு!
இந்நிலையில் நேற்று நடந்த இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் பார்த்திபன் விஜய் பற்றி மறைமுகமாக பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜெயம் உங்கள் கையில் தான் இருக்கு" என பார்த்திபன் கூற, அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் விஜய் கட்சி பெயரை கத்தி அரங்கத்தை அதிர வைத்தனர்.