16 ஜோடிகளுக்கு விஜய் செய்து வைத்த திருமணம்! பிரபல நடிகர் பார்த்திபன் வெளியிட்ட பதிவு
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் பார்த்திபன். இவர் தனது எக்ஸ் தளத்தில் விஜய் குறித்தும், தனது கைவிட பட்ட திரைப்படம் குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், "'கல்யாணசுந்தரம்' போட்டோ செஷனோடு முடிந்து (கை)விட்டப் படம். ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும் செய்யலாம் என தொடங்கி ஙைத்தேன்.
அதுவே பின் தொடரப்பட்டது பலரால். பின்னெரு காலத்தில் தளபதி விஜய் என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் விஜய் தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என அப்போது புரட்டிப் பேசினேன். அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்து தான் அவருக்கு கட்சித் துவங்கும் தைரியம் வந்தது" என பதிவிட்டுள்ளார்.
கல்யாணசுந்தரம்’
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 20, 2025
போட்டோ செஷனோடு முடிந்து(கை)விட்டப் படம்.
ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும் செய்யலாம் என தொடங்கி ஙைத்தேன்.அதுவே பின் தொடரப்பட்டது பலரால். பின்னெரு… pic.twitter.com/ub6IxkpxzJ
விஜய் குறித்து பார்த்திபன் வெளியிட்ட இந்த பதிவு தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், ஜனநாயகன் படம்தான் தனது கடைசி திரைப்படம் என அறிவித்துவிட்டார். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவில் இருந்து விலக அவர் முடிவு செய்துள்ளார். ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடித்து போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு படம் ரிலீஸ் ஆகிறது.