தனுஷ் பட ஷூட்டிங்கில் எனக்கு நடந்த மோசமான சம்பவம்!! நடிகை பார்வதி ஓபன் டாக்..
நடிகை பார்வதி
மலையாள சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பார்வதி திருவோது, அவுட் ஆஃப் சிலபஸ், நோட்புக் போன்ற படங்களில் அறிமுகமாகினார். அதன்பின் தமிழில், போ, சென்னையில் ஒரு நாள், மாரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ள பார்வதி, தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

தனுஷ் பட ஷூட்டிங்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தனுஷுடன் நடித்த மரியான் பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதில், மரியான் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில், கதாநாயனுடன் வரும் காட்சியொன்றில் தண்ணீரில் முழுவதுமாக நனைந்தபடி நடித்தேன்.
அப்போது மாற்றுவதற்கு நான் உடைகள் கொண்டு வரவில்லை, என் தேவைகளை கவனித்துக்கொள்ள அங்கு யாரும் இல்லை. ஒருக்கட்டத்தில், உடை மாற்றுவதற்காக நான் என் ஓட்டல் அறைக்கு செல்ல வேண்டியிருந்தது என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை.

எனக்கு பீரியட் என்றும் நான் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சத்தமாகச் சொன்னேன். மரியான் ஷூட்டிங்கின் போது என்னை சேர்த்து மொத்தம் 3 பெண்கள் மட்டுமே பணிபுரிந்தோம், அது எனக்கு கடினமாக இருந்தது. எனக்கு ஆதரவாக அங்கு யாருமில்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகை பார்வதி.
இயக்குநர் பரத் பாலா இயக்கத்தில் 2013ல் மரியான் படம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.