பெருமை பீற்றிக் கொள்ளும் ஆண்டவர்! கமல் ஹாசனின் வரியால் விக்ரம் படத்திற்கு வந்த சோதனை..

Kamal Haasan Anirudh Ravichander Vikram Movie
3 நாட்கள் முன்
Edward

Edward

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் பிலிம் இண்டநேஷனல் தயாரிப்பில் வரும் ஜூன் 3 ஆம்தேதி படம் உலகளவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் வரும் மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அனிருத் இசையில் பத்தலே பத்தலே பாடல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் வரிகளில் சென்னை பாசையில் அவரே பாடியுள்ளது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் பாடல் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வண்ணம் இருப்பதாக பலர் புகாரளித்து வந்தனர். அரசியல் பற்றி கருத்துக்களும் வெளிப்படையாக கமல்ஹாசன் இப்பாடலில் கூறியுள்ளார்.

தன்னை பகுத்தறிவாளராக காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன் தன்னை ஆண்டவர் என்ற வார்த்தையையும் அவரே வரிகளில் பயன்படுத்தியது ரசிகர்கள் மத்தியில், ஏன் கமல் தன்னை இப்படி பெருமை பீற்றுக்கொள்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.