பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?.. பிக் பாஸ் புகழ் பவித்ரா லட்சுமி ஓபன் டாக்
பவித்ரா லட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர் பவித்ரா லட்சுமி. இதையடுத்து இவர், சதிஷ் நடிப்பில் 2022 -ம் ஆண்டு வெளியான நாய் சேகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
சமீப காலமாக, பவித்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும், அதனால் ஏற்பட்ட உடல் அலர்ஜியால் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூக வலைதளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.
ஓபன் டாக்
தற்போது, இது குறித்து நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன் என்று வரும் செய்திகள் உண்மை இல்லை.
நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு எந்த சிகிச்சையும் பெறவில்லை. உங்கள் பொழுதுபோக்கிற்காக என் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்.
நான் அது போன்ற பெண் இல்லை. பொய்யான விஷயங்களை பரப்பி என் வாழ்வை கெடுக்காதீர்கள். எனக்கு எதிர்காலம் உள்ளது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.