ஒரு போட்டோ போட்டது தப்பா! ரசிகர்களின் செயலால் கடும்கோபத்தில் நடிகை பவித்ரா..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஆர்பில் முதல் இடத்தினை பிடித்த நிகழ்ச்சி குக்வித் கோமாளி நிகழ்ச்சி. அதிலும் கடந்த இரண்டாம் சீசன் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று எங்கு போனாலும் இதைவைத்து தான் காமெடி உருவாகி வருகிறது. அந்தவகையில் குக்வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல இடத்தினை பெற்றுள்ளது. நிகழ்ச்சியை போன்று அதில் பங்கேற்ற கோமாளில் மற்றும் போட்டியாளர்களும் நல்ல பேர் வாங்கியுள்ளனர்.
அதில், நடிகை பவித்ரா மக்களுக்கு பிடித்தமான ஒரு பெண்ணாக மாறி பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா லட்சுமி சமீபத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்தநிலையில், சில தினங்களுக்கு முன் பவித்ராவின் ஒரு புகைப்படம் வைரலாகியது. அப்புகைப்படத்தோடு டேக் மி அப் என்ற ஆங்குல வசனத்தோடு பதிவிட்டு இருந்தது. ஆனால் அது பவித்ராவின் உண்மையாக சமுகவலைத்தளப்பக்கம் கிடையாதாம். அப்புகைப்படத்தினை வைத்து நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை பதிவிரக்கி வைரலாக்கி கலாயத்து வந்தனர்.
இதையறிந்த பவித்ரா, மீம்ஸ்களை பார்த்து சிரித்தேன் என்று கூறி அது என்னுடைய கணக்கு கிடையாது. நான் அப்படியான வார்த்தை பதிவிடவில்லை என்று கோபப்பட்டு உண்மையாக கணக்கை பகிர்ந்துள்ளார்.
இதோ பவித்ராவை வைத்து கலாய்த்த மீம்ஸ்கள்...