ஸ்ரீதேவி மகள்-னா எப்படி வேணா நடிக்கலாமா!! ஜான்வி கபூரை விளாசிய நடிகை பவித்ரா மேனன்..
ஜான்வி கபூர் பரம் சுந்தரி
பாலிவுட் சினிமாவில் இருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். சமீபத்தில் சித்தார்த் மல்யோத்ராவுடன் ’பரம் சுந்தரி’ என்ற படத்தில் மலையாள பெண் ரோலில் நடித்துள்ளார்.
ஜான்வி கபூர் மலையாள ரோலில் நடித்ததை பலரும் விமர்சித்து வரும் நிலையில், நடிகை பவித்ரா மேனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பவித்ரா மேனன்
அதில், நான் ஒரு மலையாளி, பரம் சுந்தரி படத்தின் டிரெய்லரை பார்த்தேன். இதைப்பற்றி நான் சொல்ல நினைக்கிறேன்.
ஜான்வியின் கதாபாத்திரம் உச்சரிப்பு பிழைகளுடன் தன்னை கேரள பெண் என்று அறிமுகப்படுத்தும் காட்சியை அவர் சுட்டி, சரியான மலையாள நடிகர்களை நடிக்க வைப்பதில் என்ன பிரச்சனை? நாங்கள் திறமை குறைந்தவர்களா? கேரளாவில் இப்படிப் பேசுவதில்லை.
நான் எப்படி இந்தியில் பேசுகிறேனோ, அதே போல் மலையாளத்தையும் நன்றாகப் பேசுவேன். இந்திப் படத்தில் ஒரு மலையாளிக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு மலையாளியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமா? என்ற கேள்வியையும் பவித்ரா மேனன் கேட்டுள்ளார்.