பாவனியை கல்யாணம் பண்ண ரிஸ்க் எடுத்த அமீர்.. தொலைக்காட்சி வேண்டாம் சொல்லியும் இப்படியா..

Bigg Boss Pavani Reddy
By Edward Aug 17, 2022 08:54 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சி மூலம் காதல் ஜோடிகளாக உலாவந்த போட்டியாளர்களில் சமீபத்தில் ஜோடி பாவனி - அமீர். நிகழ்ச்சியில் அமீர் பாவனிக்கு பல முறை காதல் பிரபோஸ் செய்தும் முத்தம் கொடுத்தும் சர்ச்சையில் சிக்கினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு தன் காதலில் இருந்து பின் வாங்காமல் வரும் அமீர் கிடைக்கும் போதெல்லாம் பாவனியை இம்பிரஸ் செய்து பல காரியங்களை செய்து வருகிறார். சமீபத்தில் கூட பிபி ஜோடிகள் 2 சீசனில் கலந்து கொண்ட இருவரும் ஜோடிப்போட்டு ஆடி வருகிறார்கள்.

பாவனியை கல்யாணம் பண்ண ரிஸ்க் எடுத்த அமீர்.. தொலைக்காட்சி வேண்டாம் சொல்லியும் இப்படியா.. | Pavni Amir Issues Last Episodes Injury

சில வாரங்களுக்கு முன் பாவனியின் சகோதரிகள் முன்னிலையில் காதல் மோதிரத்தை மாட்டிவிட்டார் அமீர். அப்படியிருந்தும் பாவனி காதலை ஏற்காமல் மெளனம் காத்தார். இந்நிலையில் கடந்த வார எபிசோட்டில் இருவருக்கும் திருமணம் நடைபெறுவது போன்ற நடனத்தை ஆடினர்.

அமீர் பாவனிக்கு தாலிக்கட்டும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. தற்போது அந்த எபிசோட்டின் போது அமீருக்கு காலில் அடிப்பட்டு நடனமாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராம்.

பாவனியை கல்யாணம் பண்ண ரிஸ்க் எடுத்த அமீர்.. தொலைக்காட்சி வேண்டாம் சொல்லியும் இப்படியா.. | Pavni Amir Issues Last Episodes Injury

ஆனால் என்னால் ஆட முடியும் என்று பயிற்சியும் மேற்கொண்டிருக்கிறார். தொலைக்காட்சி சேனலும் வீல் சேரில் ஆடு இல்லையென்றால் நிகழ்ச்சியில் இருந்து விலகிவிடு என்று கூறியுள்ளனர். அதை மீறியும் அமீர் அந்த எபிசோட்டில் கலந்து கொண்டு நடனமாடியிருக்கிறார்.

பாவனியை எப்படியாவது கல்யாணம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் அமீர் இப்படியொரு ரிஸ்க் எடுத்துள்ளதை பலர் பாராட்டி வருகிறார்கள். உண்மையில் அமீரை பாவனி எப்போது ஏற்றுக்கொண்டு திருமணம் செய்யப்போகிறார் என்ற ஆதங்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

GalleryGallery